கைதடி மத்தி பகுதியில் கிணற்றில் தவறி விழ்ந்த யுவதியொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கைதடி குமரநகரை சேர்ந்த கணேசன் ஜெசிக்கா (வயது 18) எனும் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த யுவதி நேற்றைய தினம் கிணற்றடிக்கு முகம் கழுவதற்காக சென்ற போதே கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார்.
அதனை அவதானித்த வீட்டார் யுவதியை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் அங்கு சிகிச்சை பயனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.


