பொலிஸ் நிலைய களஞ்சியசாலையில் இருந்த 2 கைதுப்பாக்கிகள் மாயம்

230 0

அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தின் களஞ்சியசாலையில் வைக்கபட்டிருந்த 2 கைதுப்பாக்கிகள் காணாமல் போனமை தொடர்பில் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

நுவரெலியா பொலிஸ் வலையத்திற்கு உட்டபட்ட அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தின் துப்பாக்கி களஞ்சியசாலையில் வைக்கபட்டிருந்த 2 கைதுப்பாக்கிகள் காணாமல் போனமை தொடர்பில் நுவரெலியா பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் ஐ.வூ.டீ. சுகத்தபால தெரிவித்துள்ளார். 

அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தில் உள்ள துப்பாக்கி களஞ்சியசாலையானது குறித்த பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் பொறுப்பில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

 இங்கு இருந்த 2 கைதுப்பாக்கிகள் காணாமல் போயுள்ளதாகவும், கடந்த 23 ஆம் திகதி அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஆனந்தசிறியிடம் அறிவிக்கப்பட்டதாகவும் குறித்த நிலையத்தின் களஞ்சியசாலையில் இருந்த 2 கைதுப்பக்கிகளை பொலிஸ் உத்தியோகத்தர் மீது தனிபட்ட விரோதத்தில் இருக்கும் யாராவது 2 கைதுப்பாக்கிகளை எடுத்து மறைத்து வைத்திருக்கலாம் என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

காணாமல் போன கைதுப்பாக்கி தொடர்பில் பொலிஸ் அத்தியட்சரின் தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருவதோடு, எம்.34 என்ற வகையினை கொண்ட கைதுப்பாக்கிகளே இவ்வாறு காணாமால் போயுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.