புற்றுநோய் வைத்தியசாலைக்கான நடைபவனி கிளிநொச்சியை வந்தடைந்தது(காணொளி)

336 0

cancer-hospital-found-collection-kilinochchiபுற்றுநோய் வைத்தியசாலைக்கான நிதியை சேகரிக்கும் நோக்கில் இயக்கச்சியில் ஆரம்பிக்கப்பட்ட நடைபயணம் கிளிநொச்சியை வந்தடைந்தது.

கராப்பிட்டியவில் அமையவுள்ள புற்றுநோய் வைத்தியசாலைக்கான நிதியை சேகரிக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள றெயில் நடைபவனியின் ஐந்தாம் நாள் நடை பயணம் இன்று கிளிநொச்சி இயக்கச்சியில் இருந்து அதிகாலை ஆரம்பமாகியது.

இந்த றெயில் நடைபவனியில் விளம்பர முகவராக முன்னாள் கிரிக்கட் வீரர் மகேல ஜெயவர்தன கலந்து கொண்டார்.

ஐந்தாம் நாளான இன்று காலை கிளிநொச்சி இயக்கச்சியில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த நடை பயணம் ஏ-9 வீதியூடாக இயக்கச்சி, ஆனையிறவு, பரந்தன், கிளிநொச்சி நகர் ஊடாக இரணைமடு சந்தியை வந்தடைந்தது.

கடந்த 2011ஆம் ஆண்டு தெய்வேந்திர முனையிலிருந்து பருத்தித்துறை முனை வரை மேற்கொள்ளப்பட்ட றெயில் நடைபவனியில் சேகரிக்கப்பட்ட நிதியில் யாழ். தெல்லிப்பளையில் புற்றுநோய் வைத்தியசாலை அமைக்கப்பட்டு தற்போது செயற்பட்டு வருகின்றது.

இதன் அடுத்த கட்டமாக தெற்கே கராப்பிட்டியவில் அமைக்கப்படவுள்ள புற்றுநோய் வைத்திய சிகிச்சைப் பிரிவிற்கு நிதிப்பங்களிப்பை வழங்கும் நோக்கில் நடைபவனி ஏற்பாடு செய்யப்பட்டு, ஐந்தாம் நாளான இன்று கிளிநொச்சி இயக்கச்சி சந்தியிலிருந்து ஆரம்பமாகி நடைபயணம் கிளிநொச்சியை வந்தடைந்தது.