அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் நெருக்கடிகளுக்குள்ளான மக்களுக்கு ஒரு தீர்வு ஆட்சி மாற்றத்தின் ஊடாகவே கிடைக்கப்பெறும் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, நாட்டின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு அனைத்து தரப்பினரும் ஒருமித்த கொள்கையுடன் செயற்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
அத்துடன் நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி, வாழ்க்கை சுமைகள் தொடர்பில் அரசாங்கம் எவ்வித கவனமும் செலுத்தவில்லை. மாறாக நெருக்கடிக்குள்ளாக மக்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் செயற்பாடுகள் மாத்திரம் இடம் பெறுகின்றன.
மின்சார விநியோகம் துண்டிப்பு, நீர் விநியோக தடை ஆகியவை இன்று எதிர்பார்க்கும் நாளாந்த நிகழ்வாக மாற்றமடைந்துள்ள எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
பலாங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.S


