வட கிழக்கு லண்டனில் தமிழ் கடைக்காரர் கொலை!

401 0

கடந்த சனியன்று காலை தனது கடையினை திறக்க காலை 5:30 க்கு வந்த ரவிக்குமார் என்ற தமிழர், வட கிழக்கு லண்டன் பின்னர் என்ற இடத்தில் குத்திக் கொல்லப் பட்டுள்ளார்.

£10 சொச்சம் சில்லறைக்காசுக்காக நடந்த தேவை இல்லாத கொலை என்று தெரிய வருகிறது. கல்லாப்பெட்டியை தூக்கி கொண்டு கொலையாளி ஓடி விட்டார். இது தொடர்பாக நடந்த இழுபறியில் தான் கொலை நடந்து இருக்கிறது.

அந்த இடத்தில 20 வருடமாக கடை வைத்திருந்தார் அவர்.

கடந்த திங்களன்று, பஸ்ஸில் பயணித்த போது, அந்த வீதி மூடப் பட்டிருந்ததால், பஸ் வேறு வழியில் திரும்பியது. கேட்ட போது, பஸ் டிரைவர்,  ‘An Idiot, killed an Idoit’ என்று  சிம்பிள் ஆக சொன்னார்.

முதலில் அர்த்தம் புரியவில்லை. இனவாதமோ என்று கூட தோன்றியது. பின்னர், தீர்க்கமாக பார்த்து விட்டு சொன்னார், எவ்வளவு பணம் கல்லாவில் இருக்கிறது என்று கொலையானவருக்கு தெரிந்திருக்கும் அல்லவா. வெறும் £10 பவுனுக்காக தனது வாழ்வினை இழப்பது மடமை அல்லவா…. கொண்டு போய் தொலை என்று சொல்லி தன்னை காக்காமல், ஏன் மோதலுக்கு போனார்?, என்றார்.

இப்போது  பாருங்கள், ஒரு குடும்பம், தந்தையை, கணவனை இழந்து நிக்கிறதே என்றார் .

உண்மை தானே!

பிரித்தானியா முழுவதும் கடை வைத்து இருக்கும் தமிழர்கள் நிறைந்து உள்ளனர். கடையின் முன்னே எழுதி வைத்துக் கொள்ளுங்கள். “வாடிக்கையாளர்கள் ‘மொபைல் போன் மூலம், கனெக்ட் மட்டை மூலம் pay பண்ணுவதால், எம்மிடம் £10 – £20 மேல் கல்லாவில் இல்லை”.

வருபவர்கள் அது தெரிந்தும் வந்தால், கொடுத்து அனுப்பி விடுங்கள்.

அவரது வாடிக்கையாளரான  வெள்ளையர், இறந்தவருக்கான ஒரு fund raising முயல்வு ஒன்றினை ஆரம்பித்துள்ளார்.