வெளிநாடு ஒன்றில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கைத் தமிழ் இளைஞன்!

286 0

பங்களாதேஷில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த இலங்கை தமிழரின் விபரங்களை அந்நாட்டு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.

தலைநகர் டாக்காவில் 22 மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 88 பேர் வரையில் உயிரிழந்தனர். இதில் இலங்கையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்திருந்தார்.

நிரோஷ் விக்னராஜா என்ற இலங்கை தமிழர் தனது உயிரை காப்பாற்றிக் கொள்ளும் நோக்கில் மாடியிலிருந்து பாய்ந்த நிலையில் உயிரிழந்தார்.

அவரின் புகைப்படம் மற்றும் மேலதிக விபரங்களை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. பாரிய தீ விபத்து ஏற்படும் போது குறித்த நிரோஷ் அங்கு பணியாற்றியுள்ளார்.

உயிரிழந்த இலங்கையர் அவரின் தாயான அனுஷராணி விக்னராஜா மற்றும் சகோதரன் இமயன் விக்னராஜாவுடன் வாழ்ந்து வந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.