முத்துராஜவெல முதல் விமான நிலையம் வரை நிலக்கீழ் மார்க்கம்-ரணதுங்க

336 0

விமானங்களுக்கு தாமதமின்றி எரிபொருளை வழங்குவதற்கு முத்துராஜவெல பிரதேசம் தொடக்கம் விமான நிலையம் வரை புதிய நிலக்கீழ் மார்க்கமொன்று அமைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தரம் குறைந்த எண்ணெய் இறக்குமதியை நிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாகவும் 40 வருடங்களுக்கு பின்னர் கொலன்னாவ தொகுதில் எண்ணெய் தாங்கி ஒன்றுஅமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர், விமானங்களுக்கு தாமதமின்றி எரிபொருளை வழங்குவதற்கு முத்துராஜவெல பிரதேசம் தொடக்கம் விமான நிலையம் வரை புதிய நிலக்கீழ் மார்க்கம் ஒன்று அமைக்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.