செய்யப்படுவாராயின், அது நிச்சயமாக தமிழ் இனத்திற்கே ஆபத்தாக அமைந்து விடும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலின் மூலமே தமிழ் மக்கள் கொடுரமாக கொலை செய்யப்பட்டனர். பாலியல் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றன. சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்படுவாராயின், அது தமிழ் மக்களுக்கு அழிவை ஏற்படுத்தும். மீண்டும் பௌத்தமயமாக்கள்கள் இடம்பெறும்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


