வவுனியா புதிய பஸ் நிலையத்தில் ஒ போத்தல் சட்டவிரோத கசிப்பை உடமையில் வைத்திருந்த குற்றசாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பிரதிப்பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் விசேடபோதை ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வவுனியா புதிய பஸ் நிலையப்பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் நபர் ஒருவரிடம் சோதனையில் ஈடுபட்டபோதே குறித்த சட்டவிரோத மதுபானம் மீட்கப்பட்டதுடன் அதனை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பதுளை பகுதியை சேர்ந்த நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் கிளிநொச்சி பகுதியில் இடம்பெற்ற திருமண வைபவம் ஒன்றில் கலந்துவிட்டு மீண்டும் பதுளை நோக்கி செல்வதற்காக வவுனியா பஸ் நிலையத்தில் காத்திருந்தபோதே கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்டவர் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


