ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் நடந்த மோதல்களில் 24 பேர் பலி

198 0

ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் நடந்த மோதல்களில் 24 பேர் பலியாயினர்.

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளை இன்னும் முற்றிலும் ஒழிக்க முடியாத நிலை நிலவுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு, கஜினி மாகாணத்தின் தலைநகரான கஜினி நகரையொட்டி அமைந்துள்ள புறநகர் பகுதிகளில் உள்ள சோதனைச்சாவடிகள் மீது தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல்களில் 9 போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர். 6 போலீசார் படுகாயம் அடைந்தனர்.

இதற்கிடையே பாதக்‌ஷான் மாகாணத்தின் தலைநகர் பைசாபாத் அருகேயுள்ள ஆர்கான்ஜகாவில் நடந்த மோதலில் தலீபான் பயங்கரவாதிகளும், பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிகள், கையெறி குண்டுகளை பயன்படுத்தி ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டனர்.

இதில் பாதுகாப்பு படையினர் 5 பேர், பொதுமக்களில் 2 பேர், தலீபான் பயங்கரவாதிகள் 8 பேர் பலியாகினர்.

இந்த தாக்குதல்கள் அங்கு மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.