யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்திலும் இன்று (புதன்கிழமை) கல்விசாரா ஊழியர்களால் பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பல்கலைக்கழகத்தில் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபடும் வகையில் பல்கலைக்கழக வளாகத்தில் ஊழியர்கள் ஒன்று சேர்ந்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.
கைவிரல், கண்ரேகை பதிவு இயந்திரத்தின் மூலம் வருகை மற்றும் மீள் செல்கையினை பதிவு செய்தல் தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் உள்வாங்கப்பட்ட பொது நிர்வாக சுற்று நிரூபங்களை பாரபட்சமாக நடைமுறைப்படுத்துவதை எதிர்த்தும், ஊழியர்களின் மேலதிக நேர கொடுப்பனவுக்கு நியாயமற்ற நிபந்தனைகள் விதிப்பதையும், ஊழியர்களின் வரவுப் பதிவேட்டை நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்வைத்தும் இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


