வவுனியாவில் நேற்று இரவு வாகல்கட, ஹெப்பற்றிகொலாவ பகுதிக்குள் நுழைந்த யானை துவிச்சக்கர வண்டியில் தனது வீடு நோக்கி சென்ற சிறுவனை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவமானது கிராமத்தையே சோகமயமாக்கியுள்ளது.
இச்சம்பவமானது நேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 15 வயதுடைய சிறுவன் தன்னுடைய நண்பனின் வீட்டுக்கு சென்று விட்டு தனது வீடு நோக்கி துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த வேளை யானை தாக்கியதில் படுகாயமடைந்திருந்தார்.
கூக்குரல் சத்தம் கேட்டு ஓடிவந்த அயலவர்கள் உடனடியாக ஹெப்பற்றிகொலாவ வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்திருந்தார்கள்.
மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி இன்று காலை சிறுவன் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


