
மலையக மக்கள் விடுதலை முன்னணி எனும் பெயரில், தொழிற்சங்கம், அரசியல் கட்சியொன்று, ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி, ஹட்டனில் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது என, பொதுச் செயலாளர் சவேரியார் ஜேசுதாஸ் தெரிவித்தார்.
இந்த அங்குரார்ப்பணம் தொடர்பாக, நேற்று (26), ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
மலையக மக்களின் உரிமைகள் பின்தள்ளப்பட்டு வரும் நிலையில், நேர்மையாக நடந்துகொள்ளாத மலையகத் தலைமைகளுக்கு ஒரு முன்னுதாரணமாக செயற்படும் வகையில், இந்தப் புதியக் கட்சியை ஆரம்பிக்கவுள்ளதாகவும் ஹட்டன் இந்திரா கலாசார மண்டபத்தில், வைபவ ரீதியாக கட்சியின் ஆரம்பப் பணிகளை முன்னெடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

