வரவு செலவு திட்டத்துக்கு சு.க ஆதரவு?

316 0

வரவு-செலவுத் திட்டத்தை  தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கம் இல்லையெனத் தெரிவித்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐ.தே.கவுடன் இணைந்து மீண்டும் தேசிய அரசாங்கம்  அமைக்​கப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளது.

கொழும்பிலுள்ள சுதந்திர ஊடகக் கேந்திர நிலையத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால மேலும் தெரிவிக்கையில்,

ஐ.தே.கவுடன் இணைந்து இனி ஒருபோதும் சுதந்திரக் கட்சி ஆட்சி அமைக்கப்போவதில்லை என்றும்,  மீண்டும் தேசிய அரசாங்கம் அமைப்பது குறித்து வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்றும்,  தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டைக் கொண்டு செல்ல வரவு-செலவுத் திட்டம் அவசியமெனத் தெரிவித்த அவர், நாட்டின் ஸ்தீரத்தன்மைக்கு பாதகமாக சுதந்திரக் கட்சி ஒருபோதும் செயற்பாடாது என்றார்.