யாத்திரை சென்றவர்களின் பஸ் கவிழ்ந்ததில் 60 காயம்!

222 0

வலப்பனை – நுவரெலியாவீதியின் மஹவுவவத்தை பகுதியில் பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இவ்வாறு காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாத்திரை சென்றவர்களை ஏற்றிச்சென்ற பஸ் வண்டியொன்யே மஹவுவவத்தையிலுள்ள கோவிலுக்கு அருகில் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.