ஈரான் கப்பலை கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவர நடவடிக்கை

227 0

தென் கடற்பரப்பில் ஹெரொயின் போதைப்பொருளுடன் ஈரான் கப்பலொன்று கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அக்கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டவுள்ளது.

மேலும் இதன்போது ஈரானிய பிரஜைகள் 9 பேர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கப்பலில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் சுமார் 100 கோடி ரூபாய் பெறுமதியுடையதென தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினரும் கடற்படையினருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இந்தக் கப்பல் கைப்பற்றப்பட்டுள்ளது.

சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் கப்பலில் இருந்தவர்கள் ஹெரொயினின் ஒரு பகுதியை கடலில் எறிந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கொழும்புத் துறைமுகத்திற்கு அழைத்துவரப்படவுள்ளனர். அத்துடன்

போதைப்பொருளுடன் பறிமுதல் செய்யப்பட்ட கப்பல், மாகந்துரே மதூஷினால் இலங்கைக்கு போதைப்பொருளை அனுப்புவதற்காக பயன்படுத்தப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.