ஐ.நா.வின் செயற்பாடு சிறுபான்மையினரை ஒடுக்க அங்கீகாரம் அளிக்கிறது – அனந்தி

330 0

ஐ.நா.வினால் இலங்கைக்கு கால நீடிப்பை வழங்கியுள்ளமையானது, சிறுபான்மையின மக்கள் எந்த நாட்டிலும் இன அழிப்புக்கு உட்படுத்தப்படலாம் என்ற செய்தியை உலகுக்கு வழங்கியுள்ளதாக முன்னாள் வட.மாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

யாழ். சுழிபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “ஐ.நா.வின் தீர்மானத்தால் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவொரு நன்மையும் இல்லை.

தமிழர்களை மட்டுமல்லாது சர்வதேசத்தையும் ஏமாற்றியுள்ளது. அத்தோடு சர்வதேசமும் அதற்கு உடந்தையாக செயற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களின் கருத்தை கேட்காது தன்னிச்சையாக நாடுகளுடைய அரசியல் பூகோள விடயங்களை கருத்திற்கொண்டே இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

நீதியை கோரி இனிமேல் ஐ.நா. விற்கு செல்ல முடியாது. ஏனெனில் நாம் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டுள்ளோம்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.