மு.க.ஸ்டாலின் மீது தலைமை தேர்தல் அதிகாரியிடம் அ.தி.மு.க. புகார்!

246 0

கோடநாடு கொலை வழக்கில் முதல்-அமைச்சரை தொடர்புபடுத்தி பேசுவதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீது தலைமை தேர்தல் அதிகாரியிடம் அ.தி.மு.க. புகார் கொடுத்துள்ளது.

கோடநாடு கொலை வழக்கில் முதல்-அமைச்சரை தொடர்புபடுத்தி பேசுவதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீது தலைமை தேர்தல் அதிகாரியிடம் அ.தி.மு.க. புகார் கொடுத்துள்ளது.
கோடநாடு மரணங்கள்
இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம், அ.தி.மு.க. செய்தித்தொடர்பாளர் பாபு முருகவேல் கொடுத்த புகாரில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கோடநாட்டில் நடந்த மரணங்கள் குறித்து 20-ந்தேதியில் திருவாரூரிலும், 21-ந்தேதி முசிறியிலும் மு.க.ஸ்டாலின் பேசினார். அங்கு நடந்த சம்பவத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி மு.க.ஸ்டாலின் பேசியிருக்கிறார்.இந்த வழக்கு தொடர்பாக கருத்துகளை வெளியிட சென்னை ஐகோர்ட்டு ஏற்கனவே தடை விதித்துள்ளது. ஆனால் அதை மீறுகிற வகையில் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். அதன் மூலம் அவர் தேர்தல் நடத்தை விதிகள் பி5, 15 ஆகியவற்றை மீறியிருக்கிறார்.எனவே அவர் மீது தேர்தல் நடத்தை விதிமீறல் குற்றத்தின் கீழும், குற்ற விசாரணை முறைச்சட்டத்தின் கீழும் தவறிழைத்துள்ளார். எனவே அவர் மீது தேர்தல் விதிமீறல் குற்றத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதோடு, அவரை கோடநாடு தொடர்பாக பேச தடை விதிக்க வேண்டும்.
துரைமுருகன்
மேலும், வேலூரில் 20-ந்தேதி நடந்த தி.மு.க. வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அந்த கட்சியின் பொருளாளர் துரை முருகன் பேசினார். அப்போது தேர்தல் ஆணையம் அனுமதித்த அளவுக்கும் அதிகமாக செலவு செய்ய தயாராக உள்ளதாக கூறினார்.

பல மடங்கு வரியை வேலூர் மாநகராட்சி உயர்த்திவிட்டதால் அரசுக்கு வரி செலுத்த வேண்டாம் என்று அவர் பேசினார். இது அரசுக்கு வரும் வருவாயை தடுக்கும் நடவடிக்கையாகும்.
நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் செலவு ரூ.70 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டமன்றத் தொகுதிக்கு ரூ.50 லட்சம் செலவழித்தாலும், அதை அவர்களுக்கு பரிசாகத் தருவதாக கூறியுள்ளார்.இந்த பேச்சு, தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மீறுவதாக உள் ளது. எனவே துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் மீதும் தேர்தல் விதி மீறல் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.