ரணில் அரசாங்கத்தின் நிலையற்ற வெளிநாட்டு கொள்கையால் இலங்கை தனிமைப்பட்டுள்ளது- தினேஸ்

333 0

ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் நிலையில்லாத வெளிநாட்டு கொள்கையினால் பல உலக நாடுகள் இலங்கையை தனிமைப்படுத்தி உள்ளதாக மஹா ஜன எக்சத் பெரமுன குற்றம் சுமத்தியுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,”ரணில் தலைமையிலான அரசாங்கம் கடைபிடிக்கும் வெளிநாட்டு கொள்கைகளினால், நாடு பாரிய சாவால்களுக்கு உள்ளாகியுள்ளது. ஏற்கனவே இலங்கை தொடர்பான யோசனையை முன்வைத்த அமெரிக்கா இப்போது அந்த பேரவையில் அங்கம் வகிப்பது இல்லை.

முன்பு எமக்கு ஆதரவாக செயற்பட்ட நாடுகள் ரணிலின் வெளிநாட்டு கொள்கையினால் தூரம் சென்றுள்ளன. வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இங்கு விசாரணைகளை நடத்த முடியாது.

எனவே இந்த நாட்டுக்கு எதிரான பிரேரணையில் இருந்து முற்றாக விலக வேண்டும். இலங்கை போன்ற நாடுகளின் பிரச்சினைகளில் எவரும் குறுக்கிட வேண்டாம் அச்சுறுத்தவும் வேண்டாம்.

நேற்று இலங்கை பிரதிநிதிகள் செயற்பட்டவிதம் வரவேற்கதக்கது என்றாலும் அது போதாது. வெளிவிவகார அமைச்சு இலங்கையின் கடமைகளை நிறைவேற்றுவது இல்லை. இதனை ஜனாதிபதியும் அறிந்துள்ளார்” என தினேஸ் குணவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.