இல.கணேசனுக்கு மத்திய மந்திரி பதவி

291 0

201610081050315446_ganesan-to-boost-tamil-nadu-representation-in-union-cabinet_secvpfதமிழக பா.ஜனதா மூத்த தலைவரும், தேசிய செயற் குழு உறுப்பினருமான இல.கணேசனுக்கு மத்திய மந்திரி பதவி வழங்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்.இல.கணேசனுக்கு மத்திய மந்திரி பதவி வழங்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்.

தமிழக பா.ஜனதா மூத்த தலைவரும், தேசிய செயற் குழு உறுப்பினருமான இல. கணேசன் டெல்லி மேல்- சபை எம்.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து டெல்லி மேல் சபைக்கு எம்.பி யாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்த முன்னாள் மத்திய மத்திரி நஜ்மா ஹெப்துல்லா மணிப்பூர் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டதால்.அவரது எம்.பி. பதவி இடம் காலியானது. அந்த இடத்துக்கு இல.கணேசன் மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

அவரது நியமனம் தமிழக பா.ஜனதாவினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இல.கணேசனுக்கு மத்திய மந்திரி பதவி கிடைக்கும் என்றும் அவரை மத்திய மந்திரியாக்க பிரதமர் மோடி முடிவு செய்து இருப்பதாகவும் பா.ஜனதா நிர்வாகிகள் தெரிவித்தனர்.

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஒரு இடம் மட்டுமே கிடைத்தது. கன்னியாகுமரி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய கப்பல் போக்குவரத்து மந்திரியாக உள்ளார். தமிழகம் சார்பில் இவர் ஒருவர் மட்டுமே மந்திரியாக இருக்கிறார்.

தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்களை தீவிரமாக செல்படுத்த பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் பா.ஜனதாவை வளர்க்க முடியும் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் கருதுகிறார்கள். பொன்.ராதாகிருஷ்ணன் குளச்சல் துறைமுகம் கொண்டு வந்துள்ளார். துறைமுகம் அமைப்பதற்கான பணிகளில் அவர் முழு நேரமாக ஈடுபட்டு இருப்பதால் தமிழகத்தில் மற்ற பகுதிகளில் கவனம் செலுத்த முடியவில்லை.

எனவே அவரது பணிச் சுமையை குறைக்கும் வகையில் இல.கணேசனுக்கு மத்திய மந்திரி பதவி அளிக்கப்படும் என்று பா.ஜனதா வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.