கனடா சார்பில் ஜெனிவாவில் உரையாற்றிய ஹரி ஆனந்த சங்கரி

190 0

ஐக்கியநாடுகள் மனித  உரிமை  பேரவையில் இன்றைய தினம்  இலங்கை தொடர்பாக நடைபெற்ற  விவாதத்தில்  கனடாவின் சார்பில்   ஹரி ஆனந்த சங்கரி உரையாற்றினார். 

ஹரி ஆனந்த சங்கரி  அந்நாட்டின் பாராளுமன்ற  உறுப்பினர் என்ற வகையில்  கனடாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி   இலங்கை மீதான விவாதத்தில் உரையாற்றினார்.  

அவர்  தனது  உரையில் குறிப்பிடுகையில்;

ஐ.நா. ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கையை நாங்கள் வரவேற்கின்றோம். இலங்கை சில முன்னேற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. காணிகள் விடுவிக்கப்பட்டமை,  இழப்பீட்டு அலுவலகம் நியமிக்கப்பட்டமை, என்பவற்றைக் குறிப்பிடலாம். எனினும் பொறுப்புக்கூறல் பொறிமுறையில் முன்னேற்றம் இல்லை என்றார்.

ஹரி ஆனந்த சங்கரி தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரின்  மகன் என்பது குறிப்பிடத்தக்கது.