நவீன பட்டுப்பாதையில் தோல்வியடைந்த ஒரு செயற்திட்டமாக அம்பாந்தோட்டை துறைமுகம்

331 0

சீனாவின் ஒரு மண்டலம் – ஒரு பாதை (நவீன பட்டுப்பாதைத் திட்டம்) திட்டத்தின் கீழான ஒரு தோல்வியடைந்த செயற்திட்டமாக அம்பாந்தோட்டைத் துறைமுகம் மாறியிருக்கின்றது என்று இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் நிறுவப்பட்ட தேசிய பாதுகாப்பு ஆய்வுகளுக்கான நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

ஒரு மண்டலம் – ஒரு பாதைத் திட்டத்தின் கீழ் அம்பாந்தோட்டையில் ஒரு துறைமுகத்தை நிர்மாணித்ததில் இலங்கை மீது எதிர்மறையான தாக்கம் ஏற்பட்டதற்கு ஒரு காரணம் அது முதலீடுகளில் இருந்து பலன்கள் எவற்றையும் தருவதற்கு தவறியமையே ஆகும் என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.