அரசாங்கத்தின் நிலைப்பாடு தேசதுரோக செயற்பாடாகும் – ஜி.எல். பீரிஸ்

340 0

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள விசேட அறிக்கைக்கு அரசாங்கம் இணக்கப்பாடு வழங்க தீர்மானித்துள்ளமை தேசதுரோக செயற்பாடாகும் என பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், 

மனித உரிமை  பேரவையில் இராணுவத்தினருக்கு எதிரான செயற்பாடுகள் இன்று தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இவ்விடயத்தை அரசாங்கம் இரண்டு தரப்பினரூடாக அணுகுகின்றது.   ஜனாதிபதி தலைமையில் ஒரு தரப்பினரும், அரசாங்கத்தின் தரப்பில் பிறிதொரு தரப்பினரும் போட்டித்தன்மையுடன் செயற்படுவதால்  எவ்விதமான சாதகமான தீர்மானங்களும் இலங்கைக்கு  ஏற்படாது.

அத்துடன் தற்போதைய செயற்பாடுகள் அனைத்தும் 2020 ஆம் ஆண்டு  ஆட்சி பொறுப்பினை ஏற்கவுள்ள அரசாங்கத்திற்கும் பாரிய சவால்களை ஏற்படுத்தும் என்றார்.