மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா நகருக்கு நீரை வழங்கும் மற்றும், நீர் சேகரிக்கும் தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்புத் திணைக்களத்தில் இன்று காலை 10.00 மணியளவில், 100 கிலோ கிராம் எடையுடைய குளோரின் கேஸ் சிலிண்டரிலிருந்து வாயு கசிவு ஏற்பட்டுள்ளது.
இதன்போது, குறித்த பகுதியில் உள்ள அனைவரையும் வெளியேறுமாறு மஸ்கெலியா பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். மேற்படி வாயுக் கசிவானது, குறித்த தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட திருத்த வேலை காரணமாகவே இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், மஸ்கெலியா பொலிஸார் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு திணைக்களத்தினர் மேற்கொண்ட முயற்சியினால் அனர்த்தம் எதுவும் நிகழாது தடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் பாதிப்படைந்த வடிகால் திணைக்கள அதிகாரி மற்றும், ஆய்வுகூட உத்தியோகத்தரும் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், அப்பகுதியை சுற்றி பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளமையும் குறிப்பிடதக்கது.


