பாராளுமன்ற சுற்று வட்டத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது அமைதியற்ற முறையில் செயற்பட்டதன் காரணமாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் மகில் பண்டார தெஹிதெனிய பொலிஸாரால் கடந்த 13 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் இன்று (18) வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளரை பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.


