தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்த மூவருக்கு விளக்கமறியல்

247 0

Sஊவா மாகாண சபையில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி இலட்சக் கணக்கான பணத்தை மோசடி செய்த மூவரை பதுளை நீதவான் நீதிமன்ற நீதிபதி சமிந்த கருணாதாச நாளை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

ஊவா மாகாண சபையில் சாரதிகளாக உள்ன இருவரும் சபையின் பாதுகாப்புக் கடமையிலிருந்து வரும் ஒருவருமாக மூவர் பதுளைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குற்படுத்தியிருந்தனர். 

இம் மூவர் விசாரணையின் பின்னர்இன்று பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போது  நீதிபதி சமிந்த கருணாதாச ஆஜர் செய்யப்பட்ட மூவரையும் நாளை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

ஊவா மாகாண சபையில் மூவருக்கு தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி அவர்களிடம் மூன்று இலட்சம் ரூபா பணத்தைப் பெற்று மோசடி செய்தமையினால்  பாதிக்கப்பட்ட மூவரும் பதுளைப் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்திருந்தனர். இதனையடுத்து குறிப்பிட்ட மூவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.