கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறு இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என்று ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
அத்துடன் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்குத் தேவையான பணிகள் தற்போது பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
கடந்த டிசம்பர் மாதம் நாடு முழுவதிலும் 4 ஆயிரத்து 661 மத்திய நிலையங்களில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


