ஆப்கானிஸ்தானில் படைகள் தாக்குதலில் 51 பயங்கரவாதிகள் பலி!

14 0

ஆப்கானிஸ்தானில் படைகள் நடத்திய 24 மணி நேர தாக்குதலில் 51 தலீபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்கான நடவடிக்கையில் தொடர்ந்து அந்த நாட்டின் படைகள் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், அந்த நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பாத்கிஸ் மாகாணத்தில் அவர்களை வேட்டையாடும் நடவடிக்கையில் படைகள் ஈடுபட்டன.

நேற்று முன்தினம் தொடங்கி நேற்று வரையிலான 24 மணி நேரத்தில் இந்த நடவடிக்கையில் அங்கு 51 தலீபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதை ராணுவம் ஒரு செய்திக்குறிப்பில் உறுதி செய்துள்ளது.

ஆனால் இது பற்றி தலீபான் பயங்கரவாதிகள் தரப்பில் எந்த தகவலும் இல்லை.

இதற்கிடையே ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்கு பகுதியில் கோட்டி சாங்கி மாவட்டத்தில் கார் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று நேற்று நடந்துள்ளது. இதில் 2 பேர் பலியாகினர். அவர்களில் ஒருவர் கார் டிரைவர் என கூறப்படுகிறது. உரிய நேரத்துக்கு முன்னதாகவே இந்த காரில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Related Post

அமெரிக்க பாதிரியார் விடுதலை – அமெரிக்காவின் சட்ட விரோத கோரிக்கையை நிறைவேற்ற முடியாது துருக்கி அதிரடி

Posted by - September 5, 2018 0
அமெரிக்க பாதிரியார் ஆண்ட்ரூ பரன்சன் விடுதலை தொடர்பான அமெரிக்காவின் கோரிக்கை சட்ட விரோதமாக இருப்பதால் அதை நிறைவேற்ற முடியாது என துருக்கி அறிவித்துள்ளது. 

ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்து பாகிஸ்தான் ராணுவம் பீரங்கி தாக்குதல்

Posted by - February 19, 2017 0
ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்த பாகிஸ்தான் ராணுவம் எல்லையோரம் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது நேற்று பீரங்கி தாக்குதல் நடத்தியது.

விநாயகர் சிலையை கரைக்க சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உட்பட 12 பேர் பலி

Posted by - September 7, 2016 0
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் விநாயகர் சிலையை கரைக்க படகில் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உட்பட 12 பேர் பலியானதாக இந்திய ஊடகங்கள் செய்தி…

உலக வங்கியின் தலைவராக ஜிம் யாங் கிம் மீண்டும் ஒருமனதாக தேர்வு

Posted by - September 28, 2016 0
உலக வங்கியின் தலைவராக ஜிம் யாங் கிம் இன்று மீண்டும் இந்தப் பதவிக்கு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.உலக வங்கியின் தலைவராக ஜிம் யாங் கிம் இன்று மீண்டும்…