மணல் கடத்தலை முறியடிக்க சென்ற கடற்படையினருக்கும் மணல் வியாபாரிகளுக்கும் முறுகல்!

16 0

அரியாலை கிழக்கில் மணல் கடத்தல் நடவடிக்கையை முறியடிக்கச் சென்ற சிறப்பு அதிரப்படையினருக்கும் மணல் வியாபாரிகளுக்கும் இடையே மோதல் இடம்பெறுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோதலையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற யாழ்ப்பாணம் பொலிஸார், சிறப்பு அதிரடிப்படையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டில் 2 பெண்கள் உள்பட 5 பேரைக் கைதுசெய்துள்ளனர்.

“அரியாலை கிழக்குப் பகுதியில் தொடர்ச்சியாக   மணல் கடத்தல் இடம்பெறுவதாக கிடைத்த தகவலையடுத்து அதனை முறிக்க சிறப்பு அதிரடிப்படையினர் நேற்றிரவு அங்கு சென்றிருந்தனர்.

அங்கு மணல் கடத்தலில் ஈடுபட்டோரைத் தடுக்க முற்பட்ட சிறப்பு அதிரடிப்படையினருக்கும் மணல் வியாபாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதனையடுத்து சிறப்பு அதிரடிப் படையினர் மூவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

சம்பவத்தையடுத்து யாழ்ப்பாணம் பொலிஸார் அங்கு விரைந்தனர். விசாரணைகளை முன்னெடுத்தனர்.

சிறப்பு அதிரடிப் படையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் தாக்குதல் உடன் தொடர்புள்ளவர்கள் என்ற குற்றச்சாட்டில் 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன், சந்தேகநபர்களுக்குச் சொந்தமான இரண்டு சவல்கள், மோட்டார் சைக்கிள் ஒன்று மற்றும் உழவு இயந்திரம் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

Related Post

யாழில் 10 கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா தீ மூட்டி அழிப்பு

Posted by - November 23, 2017 0
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற வலயத்துக்குட்பட்ட பகுதிகளில் பிடிபட்ட சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான ஆயிரம் கிலோ கஞ்சா போதைப்பொருள் இன்று தீமூட்டி எரிக்கப்பட்டது.வழக்குகள் நிறைவடைந்து சான்றுப்…

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறை மாணவர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர்களை முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரிடம் கையளித்தனர்(காணொளி)

Posted by - January 27, 2017 0
மாலபே தனியார் மருத்து கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறை மாணவர்கள், இலவசக் கல்வி மற்றும் சுகாதார சேவையின் தரத்தை பாதுகாக்க அணிதிரள்வோம் என்ற தொனிப்பொருளில்…

தமிழர்களின் இறையாண்மையை மீண்டும் பறைசாற்றப் பிரசவிப்போம் தைத்திருநாளை!

Posted by - January 15, 2019 0
தமிழர்களின் இறையாண்மையை  மீண்டும்  பறைசாற்றப் பிரசவிப்போம் தைத்திருநாளை!!! -அனைத்துலக ஈழத்தமிர் மக்களவை- தைப்பொங்கல் மற்றும் திருவள்ளுவர் ஆண்டு 2050 ஈழத் தமிழரின் சுயநிர்ணய உரிமையை நிர்ணயிக்கும் ஆண்டாக…

சாய்ந்தமருதில் விபத்து – மூன்று பேர் பலி – 10 பேர் காயம்

Posted by - January 30, 2017 0
அம்பாறை சாய்ந்தமருது பிரதேசத்தில் பேருந்து ஒன்றும் சிற்றுந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்தனர். சம்பவத்தில் மேலும் பத்து பேர் காயமடைந்து கல்துமுனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

விடுதலைப்புலிகளால் தயாரிக்கப்பட்ட கைக்குணடுகள் மீட்பு

Posted by - August 23, 2017 0
முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பினரால் தயாரிக்கப்பட்டதாகக் கருதப்படும் கைக்குண்டுகள் வவுனியா-மூன்றுமுறிப்பு பகுதி வயல் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் அமைப்பினரால் தயாரிக்கப்பட்ட 6 கைக்குண்டுகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக…