புதுவை அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

307 0

201610071017419162_puducherry-government-employees-diwali-bonus-announcement_secvpfபுதுவை மாநில அரசு ஊழியர்களுக்கு முதல்- அமைச்சர் நாராயணசாமி தீபாவளி போனஸ் தொகையை அறிவித்துள்ளார்.புதுவை மாநில அரசு ஊழியர்களுக்கு முதல்- அமைச்சர் நாராயணசாமி தீபாவளி போனஸ் தொகையை அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்-அமைச்சரின் தனிச்செயலர் சி.ராஜமாணிக்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடந்த 4-ந்தேதி முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் தீபாவளி போனஸ் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு அதாவது பிரிவு சி, டி மற்றும் பிரிவு பி-யைச் சேர்ந்த அரசிதழ் பதிவு பெறாத ஊழியர்களுக்கு போனஸ் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு போனஸாக அவர்களுக்கு ரூ.6908 வழங்கப்படும்.

மேலும் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் தினக்கூலி ஊழியர்களுக்கு ரூ.1184 போனஸ் வழங்கப்படும். ஓராண்டு பணிநிறைவு செய்த மற்றும் 3 ஆண்டுகளுக்குள் பணி செய்த தற்காலிக பகுதி நேர மற்றும் தினக்கூலி ஊழியர்களுக்கு கருணைத் தொகையாக ரூ.1000 தரப்படும்.

மேலும் உற்பத்தி சார்ந்த போனசாக அரசு சார்ந்த நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு அமைப்புகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ரூ.11 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.