நேற்று இரவு நாடு முழுவதும் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் 1790 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.
சட்டவிரோத மதுபானம் மற்றும் ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கமைய இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.


