கொள்ளுப்பிட்டி – காலி வீதி – கிலேன் ஹாபர் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது போதை பொருளுடன் சீன பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் அடுத்து சுற்றிவளைப்பை மேற்கொண்ட போது குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது 218 லீற்றர் மதுபானம் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றது.


