ஜா எலயில் போதைப் பொருட்களுடன் இருவர் கைது

326 0

ஜா-எல, வெலிகம்பிட்டிய பிரதேசத்தில் ஒரு தொகை ஹெரோயின், ஹேஷீஸ் மற்றும் ஐஸ் போதைப் பொருட்களுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜா எல பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 16 கிலோ கிராம் ஹெரோயின், 5 கிலோ கிராம் ஹேஷீஸ், ஒரு கிலோகிராம் ஐஸ் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

அத்துடன் 4 துப்பாக்கிகளும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். 

பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கார் ஒன்றில் எடுத்துச் செல்லப்பட்ட போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன. 

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு வத்தளை ஹேகித்த வீதி பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் ஜா எல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.