சென்னையில் 16 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்

5347 0

201606280845079523_Police-inspectors-16-Change-in-Chennai_SECVPFசென்னையில் நேற்று 16 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்பட்டனர். அவர்களில் 8 பேர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர். இதற்கான உத்தரவை போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் பிறப்பித்தார். வடசென்னையில் ரவுடிகள் அட்டூழியம் அதிகரித்துவிட்டதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டதால், நேற்று வடசென்னை பகுதியில் சட்டம்-ஒழுங்கு பிரிவில் வேலைபார்த்த 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர். ஆர்.கே.நகர் செல்லப்பா, தண்டையார்பேட்டை அசோகன், வண்ணாரப்பேட்டை காசியப்பன், கொருக்குபேட்டை ஜானகிராமன், ராயபுரம் ரகுபதி, காசிமேடு வெங்கடேசன், மீன்பிடி துறைமுகம் கண்ணன், கொடுங்கையூர் செல்வகுமார் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர்கள் ஆவார்கள். காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட 8 இன்ஸ்பெக்டர்களுக்கு பதிலாக, புதிய இன்ஸ்பெக்டர்கள் 8 பேரும் உடனடியாக நியமிக்கப்பட்டனர். புதிய இன்ஸ்பெக்டர்கள் தற்போது பணிபுரிந்த இடங்கள் விவரம் அடைப்பு குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது. விவரம் வருமாறு:-

1. ஆர்.கே.நகர்- வீரக்குமார் (மத்திய குற்றப்பிரிவு) 2. தண்டையார்பேட்டை-பாலகிருஷ்ண பிரபு (பட்டினப்பாக்கம்) 3. வண்ணாரப்பேட்டை-ஜவஹர் (திருவான்மியூர்) 4. கொருக்குப்பேட்டை-அமல் ஸ்டான்லி ஆனந்த் (மாதவரம் குற்றப்பிரிவு) 5. ராயபுரம்-மோகன்ராஜ் (துறைமுகம்) 6. காசிமேடு-ஆபிரகாம் குரூஸ் துரைராஜ் (மத்திய குற்றப்பிரிவு) 7. மீன்பிடி துறைமுகம்-சரவணபிரபு (அண்ணாநகர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு) 8. கொடுங்கையூர்-ரத்தினவேல் பாண்டியன் (மத்திய குற்றப்பிரிவு).  இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் மேலும் தொடரும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

Leave a comment