போயிங் 737 மேக்ஸ் 8 தரையிறக்கம்- இன்று 35 விமானங்களை ரத்து செய்கிறது ஸ்பைஸ்ஜெட்

13 0

போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களை தரையிறக்கிய பின்னர், இன்று 35 விமானங்களை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ரத்து செய்ய உள்ளது. 

எத்தியோப்பியா ஏர்லைன்சுக்கு சொந்தமான ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானதில் இந்தியர்கள் உள்பட 157 பேர் உயிரிழந்தனர். இதே ரக விமானம் இந்தோனேசியாவில் கடந்த அக்டோபரில் விபத்துக்குள்ளானதில் 189 பேர் பலியாகினர். இதனால், ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்ததால் சீனா, எத்தியோப்பியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் அந்த ரக விமானங்களை இயக்க தற்காலிக தடை விதித்தன. 

இந்தியாவிலும் போயிங் 737 மேக்ஸ்-8 விமானங்களை தரையிறக்க சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) முடிவு செய்தது. அதன்படி போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் தரையிறக்கப்பட்டன.அதன்பின்னர், ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனங்கள் நேற்று 20 விமானங்களின் சேவையை ரத்து செய்தன. இதனால் சுமார் 300 பயணிகள் பாதிக்கப்பட்டனர். இன்று 35 விமானங்களின் சேவையை ஸ்பைஸ்ஜெட் ரத்து செய்ய உள்ளது. 

முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு எந்தவித கூடுதல் கட்டணமும் பெறாமல் அவர்களுக்கு தேவையான தங்கும் வசதியை செய்துகொடுக்க வேண்டும் என்றும் ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Post

வடகொரியாவுக்கு சீனா அன்பு கட்டளை

Posted by - August 7, 2017 0
வடகொரியா மீது ஐ.நா சபை கடும் பொருளாதார தடைகளை விதித்துள்ள நிலையில், தடைகள் மட்டுமே இறுதித் தீர்வாகாது என்றும், பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என…

ஜடேஜாவுக்கு பதில் அக்ஸர் பட்டேல்

Posted by - August 9, 2017 0
இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக அக்ஸர் பட்டேல் இந்திய அணியில் இணைக்கப்பட்டுள்ளார். இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய…

ஐ.நா. சபையில் சீர்திருத்தம் மேற்கொள்வது குறித்து உலக தலைவர்களுடன் டிரம்ப் இன்று ஆலோசனை

Posted by - September 19, 2017 0
ஐ.நா. சபையில் சீர்திருத்தம் மேற்கொள்வது குறித்து கூட்டத்தில் பங்கேற்க வரும் உலக தலைவர்களுடன் ஜனாதிபதி டிரம்ப் ஆலோசனை நடத்துகிறார்.

தென்சீனக்கடலில் சீனாவின் உரிமையை நிலைநாட்டி சீன சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு

Posted by - August 3, 2016 0
தென்சீனக்கடலில் சீனாவின் உரிமையை நிலைநாட்டும் விதத்தில் சீன சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு ஒன்றை நேற்று பிறப்பித்தது.

மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 7.2 அலகுகளாக பதிவு

Posted by - February 17, 2018 0
மெக்சிகோ நாட்டின் இன்று ரிக்டர் அளவுகோலில் 7.2 அலகுகளாக பதிவான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.