உலகின் பல்வேறு இடங்களில் பேஸ்புக், இன்ஸ்ட்ராகிராம் முடங்கியது!

14 0

உலகின் பல்வேறு நாடுகளில் பயன்பாட்டாளர்களை அதிகம் கொண்ட பேஸ்புக், இன்ஸ்ட்ராகிராம் ஆகியவை நேற்றிரவு சிறிது நேரம் முடங்கியது.

உலகின் பரவலான சமூக வலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக், உலகின் பல்வேறு இடங்களில் நேற்று இரவு திடீரென சிறிது நேரம் செயல்பாட்டினை இழந்தது. இது மிகவும் அரிதாக நடக்கக்கூடிய ஒன்றாகும். 

பேஸ்புக் பயன்பாட்டாளர்கள் தங்கள் கணக்குகளில் நுழைய முடியாமல் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகினர். பின்னர் சிறிது நேரம் கழித்து, ‘தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, பேஸ்புக் விரைவில் செயல்பாட்டிற்கு வரும். உங்களது காத்திருப்பிற்கு நன்றி’ எனும் குறுஞ்செய்தி அனைவருக்கும் கிடைத்துள்ளது.

இதேபோல் புகைப்படங்களை பகிரும் தளமான இன்ஸ்ட்ராகிராமும் செயல்படவில்லை. லண்டன், அமெரிக்கா, இந்தியா போன்ற உலகின் பல்வேறு நாடுகளின் மக்கள்  அதிக அளவில் பேஸ்புக்கினை பயன்படுத்துகின்றனர். இதுவரை பேஸ்புக் நிறுவனத்திடமிருந்து அதிகாரப்பூர்வமான தகவல் ஏதும் கிடைக்கவில்லை. 

இதன் பின்னர் , பேஸ்புக் கணக்கின் உள்ளே சென்று, புதிய பதிவுகள் ஏதும் செயல்படாமல் பழைய பதிவுகளே தொடந்து பார்வைப்படுத்தப்பட்டதாக சிலர் கூறியுள்ளனர்.

தொழில்நுட்ப உலகில் 24 மணி நேரத்தில் நடந்த இரண்டாவது வலைத்தள முடக்கம் இதுவாகும். முன்னதாக இன்று அதிகாலை கூகுள் நிறுவனத்தின் கூகுள் டிரைவ், ஹங் அவுட் போன்ற தளங்கள் சிறிது நேரம் செயல்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Post

உக்ரைன் கடற்படை கப்பல்களை கைப்பற்றியது ரஷியா- ஐநா பாதுகாப்பு கவுன்சில் இன்று ஆலோசனை

Posted by - November 26, 2018 0
கிரிமியா அருகே உக்ரைன் நாட்டு கடற்படை கப்பல்களை ரஷ்யா கைப்பற்றியதையடுத்து, இரு நாடுகளுக்கிடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

அனைத்து இந்தியர்களும் நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் – பிரதமர் மோடி 

Posted by - August 15, 2017 0
அனைத்து இந்தியர்களும் நாட்டுக்கு சேவையாற்றும் நோக்கில் செயற்பட வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். எதிர்காலம் பொருட்டு விரைவாக பயணிக்க வேண்டும் என்றும் அவர்…

சீனாவில் இடம்பெற்ற நிலச்சரிவு சம்பவம் ஒன்று தொடர்பில் 45 பேருக்கு சிறை தண்டனை  

Posted by - May 7, 2017 0
சீனாவில் இடம்பெற்ற நிலச்சரிவு சம்பவம் ஒன்று தொடர்பில் 45 பேருக்கு சிறை தண்டனை வழங்கி சீன நீதிமன்றம் ஒன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. சீனாவின் தென் பிராந்திய நகரான…

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.11,648 கோடி அபராதம்

Posted by - March 21, 2019 0
அமெரிக்காவை சேர்ந்த இணையதள ஜாம்பவானான ‘கூகுள்’ நிறுவனத்துக்கு ஐரோப்பிய யூனியன் கமிஷனர் இந்திய மதிப்பில் சுமார் ரூ.11,648 கோடி அபராதம் விதிப்பதாக அறிவித்தார்.  அமெரிக்காவை சேர்ந்த இணையதள…

அமெரிக்காவில் நாட்டை விட்டு வெளியேறும்படி சீக்கிய பெண்ணுக்கு மிரட்டல்

Posted by - March 26, 2017 0
அமெரிக்காவில் ஓடும் ரெயிலில் சீக்கிய பெண்ணுக்கு வெள்ளைக்காரர் ஒருவர் நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.