தவழ்ந்து சென்று கேணியில் விழுந்து குழந்தை பலி..,!

354 0

தாய் உணவு தயாரித்துக் கொண்டிருந்த போது தவழ்ந்து சென்ற, ஒன்றரை வயது குழத்தை அருகில் இருந்த கேணியில் வீழ்ந்து நீரில் மூழ்கி  மரணமடைந்த சம்பவம் ஒன்று மட்டக்களப்பு பழுகாமத்தில் இடம்பெற்றுள்ளது. 

தாயும் பிள்ளையும் ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டு வந்த பின்னர் குழந்தையை வீட்டுக்குள் வைத்துவிட்டு  உணவு தயாரிக்கும் பணியில் தாய் ஈடுபட்டிருந்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் தவழ்ந்து சென்று வீட்டை விட்டு வெளியேறிய குழந்தை வீட்டிற்கு முன்னாலுள்ள கேணியில் தவறி விழுந்துள்ளது. 

தாய் உணவினை தாயரித்து வந்து குழந்தையை தேடியபோது குழந்தையை காணவில்லை. பின்னர் வீடு முழவதுமாக தேடிய பின்னர் சந்தேகத்தில் அருகில் உள்ள  கேணியை சென்று பார்த்தவுடன் குழந்தை நீரில் மூழ்கி கிடப்பதனை அவதானித்து குழந்தையை மீட்டெடுத்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

குழந்தையை நீரில் இருந்து மீட்டெடுக்கும் போதே இறந்துள்ளதாக அறிய முடிகின்றது. பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வீட்டினை சுற்றியதாக மூன்று பக்கங்கள் மதில் அமைக்கபப்ட்டிருந்தபோதும் குழந்தை சென்ற பக்கம்  மதில் அமைக்கப்ட்டிருக்கவில்லை என தெரியவருகின்றது.Share