இரத்திணக் கற்களை மீள் ஏற்றுமதி செய்ய திட்டம்-ரெஜினோல்ட் குரே

307 0

இரத்திணக் கற்களை வௌிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து மீள் ஏற்றுமதி செய்யும் வேலைத் திட்டம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக இரத்திணக்கற்கள் மற்றும் தங்க ஆபரண அதிகாரசபை கூறியுள்ளது. 

அதன் தலைவர் ரெஜினோல்ட் குரே இந்த புதிய வேலைத் திட்டம் தொடர்பில் கூறியுள்ளார். 

வௌிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற தீட்டப்படாத இரத்திணக்கற்களை இலங்கையில் மேம்படுத்துவதன் ஊடாக பாரியளவான வருமானம் ஈட்ட முடிவதாக அவர் கூறியுள்ளார்.