
சட்டவிரோத மீன் கடையொன்றினை அகற்றுமாறு பொலிசார் கூறி நடவடிக்கை எடுத்த போது மீன்கடைக்காரருக்கும் பொலிசாருக்குமிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் சன்டையாக மாறியுள்ளது.
மீன்கடைக்காரர் மீன் வெட்டும் கத்தியினால் பொலிசாரை தாக்கியுள்ளார். பலத்த வெட்டுக் காயங்களுடனான பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஆபத்தான நிலையில் தியத்தலாவை அரசினர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இத்தாக்குதலையடுத்து பொலிசார் மீன் கடைக்காரரை கைது செய்ததோடு பொலிஸ் கான்ஸ்டபிள்ளை தாக்கிய மீன் வெட்டும் கத்தியையும் பொலிசார் மீட்டுள்ளனர்.
இத்தாக்குதல் சம்பவம் நேற்று மாலை பதுளைப் பகுதியின் பள்ளக்கட்டுவை நகரில் இடம்பெற்றுள்ளது.
பள்ளக்கட்டுவை நகரின் விஸ்தரிப்பு வேலைகளை வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் எல்ல பொலிசாருடன் இணைந்து மேற்கொண்ட போது சட்ட விரோத மீன் கடையை அகற்ற முற்பட்ட போதே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

