
மீண்டும் அதிகாரத்திற்கு வந்து ஆறு மாத காலத்திற்குள் கண்டி – கொழும்பு அதிவேக வீதியை மக்கள் பாவனைக்கு வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
நேற்று கண்டியில் இடம்பெற்ற ´பொறுத்தது போதும்´ மக்கள் பேரணி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள பொறுத்தது போதும் எதிர்ப்பு பேரணியின் முதலாவது மக்கள் பேரணி நேற்று கண்டியில் இடம்பெற்றது.
இந்தப் பேரணியில் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் பங்கேற்றிருந்ததுடன், தற்போது சிறிலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்திருக்கும் உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

