
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொலிஸ் அதிகாரியை எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் திணைக்கள அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர் கொழும்பு நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
மாளிகாகந்தை நீதவானுக்கு வழங்குவதற்காக ஒரு இலட்சம் ரூபா பணத்தை வர்த்தகர் ஒருவரிடம் இலஞ்சமாக கேட்டுள்ளதுடன், அதில் 80,000 ரூபாவை இலஞ்சகை பெற்ற போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காசோலை மோசடி ஒன்று தொடர்பில் குறித்த வர்த்தகருக்கு எதிராக நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவிக்காதிருப்பதற்காகவே பொலிஸ் அதிகாரி இலஞ்சம் கேட்டுள்ளதுடன், முன்னதாக 513,000 ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொண்டுள்ளார்.

