தமிழகத்தில் மேலும் 4 ‘கேந்திரிய வித்யாலயா’ பள்ளிகள்மத்திய மந்திரிசபை ஒப்புதல்

326 0

ராணுவத்தில் பணியாற்றுபவர்களின் குழந்தைகள் படிப்பதற்காக மத்திய அரசின் சார்பில் கடந்த 1963-ம் ஆண்டு ‘கேந்திரிய வித்யாலயா’ பள்ளிகள் தொடங்கப்பட்டன.

ராணுவத்தில் பணியாற்றுபவர்களின் குழந்தைகள் படிப்பதற்காக மத்திய அரசின் சார்பில் கடந்த 1963-ம் ஆண்டு ‘கேந்திரிய வித்யாலயா’ பள்ளிகள் தொடங்கப்பட்டன. பின்னர் மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கும் இந்த சேவை நீட்டிக்கப்பட்டது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, சி.பி.எஸ்.இ. என்று அழைக்கப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் இந்த பள்ளிகளை நிர்வகித்து வருகிறது.
குறைந்த கல்வி கட்டணத்தில் இந்தி மற்றும் ஆங்கில மொழியில் நிறைவான கல்வியை இந்த பள்ளிகள் அளிக்கின்றன. இதனால் இந்த பள்ளிகளை நாடு முழுவதும் அதிக அளவில் திறக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை ஆகும். இந்தநிலையில், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் இந்தியா முழுவதும் மேலும் 50 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதில் 4 பள்ளிகள் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன. அதன்படி மதுரை, கோவை, திருப்பூர் மற்றும் சிவகங்கை ஆகிய நகரங்களில் இந்த பள்ளிகள் அமைய இருப்பதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.