ஜெனிவாவும் ஈழத் தமிழர்களின் மனித உரிமை நகர்வும் .!

485 0

ஜெனிவாவும் ஈழத் தமிழர்களின் மனித உரிமை நகர்வும் என்ற கருத்தமர்வு மார்ச் 6ஆம் நாள் யாழ் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு இடம் பெற்றது.

பேராசிரியர்கள் மாணவர்கள் அடங்கலான பல்கலைக் கழக சமூகம் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் பேராசிரியர்கள் கணேசலிங்கம், குருபரன், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி கலா மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தலைவி அமலநாயகி அமலநாதன், கிழக்கு பல்கலைக் கழகம் சார்பாக முரளிதரன், தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் வசந்தராசா, அரசியல் கைதிகள் விவகாரம் சார்பாக சக்திவேல் அடிகளார் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரையும் களநிலை உரையும் வழங்கினார்கள். காணாமல் ஆக்கப்பட்டடோர்  சங்க தலைவிகளும் கலந்து கொண்டார்கள்.

மண்டபத்தில் தற்போதைய தமிழர் நிலையையும் விளித்துக் கொள்ள வேண்டிய தேவையையும் வலியுறுத்திய 20 பதாதைகளும் மண்டபத்தின் உள்ளேயும் வெளியேயும் கட்டப்பட்டிருந்தன.  இறுதியில்  அறிக்கை வாசிக்கப்பட்டு பொது அமைப்புக்களின் கையொப்பங்களும் பெறப்பட்டு முக்கியமான தூதராலயங்களுக்கு கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் மக்களுக்கான நீதி தேடலில் பல்கலைக் கழக சமூகத்தின் பங்கு மிகப் பிரதானமானது என்பதை உணர்த்தும் வகையிலும் இந்தக் கருத்தமர்வு அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.