அனைத்துலக மகளிர் தினமும் ஈழப் பெண்களும்!

176 0

சர்வதேச மகளிர் தினம் மாச் 08 ஆம் நாள் உலகலாவிய ரீதியில் கொண்டாடப்படுகின்றது. 1908-ல் நியூயோர்க்கில் வேலைபழுவிற்கு எதிராக பெண் தொழிலாளர்கள் கிளர்ந்தெழுந்து போராட்டம் நடாத்திய நாளை முன்னிறுத்தி அமெரிக்க சோஷியலிசக் கட்சி, முதன் முதலில் பெண்கள் தினத்தைக் கொண்டாடியது.

1910-ல் பெண்கள் உரிமைக்காகவும், பெண்களுக்கு வாக்குரிமை வேண்டும் என்று வலியுறுத்தியும் டென்மார்க்கின் கோபன்ஹேகனில் சர்வதேச சோஷலிஸ்ட் பெண்கள் மாநாடு நடைபெற்றது. இதில் 17 நாடுகளைச் சேர்ந்த சுமார் 100 பெண்கள் கலந்துகொண்டனர். இதில் பின்லாந்து நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட முதல் 3 பெண்களும் அடங்குவர்.. அதில் சர்வதேச ரீதியில் பெண்கள் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று விவாதிக்கப்பட்டது.. எனினும், அதற்கான திகதி தெரிவு செய்யப்படவில்லை.

1917-ல் மற்றுமொரு புரட்சி தோன்றியது. முந்தைய ஆண்டுகளில் இரஷ்யாவுக்கும் ஜெர்மனிக்கும் நடந்த போரால் ஏராளமான இரஷ்ய வீரர்கள் செத்து மடிந்தனர். மக்கள் வாழ வழியின்றிப் பட்டினியால் அவதிப்பட்டனர். பொறுக்கமுடியாமல் இரஷ்யப்பெண்கள் பொங்கி எழுந்தனர். பெப்ரவரி கடைசி ஞாயிற்று அன்று போராட்டம் ஒன்றை நடத்தினார்கள். (கிரிகோரியன் காலண்டரில் மார்ச் 8).இதைத்தொடர்ந்து இரஷ்யப் புரட்சி வெடித்தது. முடியாட்சி முடிவுக்கு வந்தது. எனவே,மாச்08 சர்வதேசம் எங்கும் மகளிர் தினமாக கொண்டப்படுகிறது.

உலகத்தின் மகளிர் தினமாக மாச்08 வரவேற்கப்பட்ட போதிலும் ஈழத்தில் எழுச்சி கொண்ட பெண்களின் தினம் ஒக்டோபர் 10 ஆம் நாள் தான் நினைவு கொள்ளப்படுகின்றது.

ஈழத்தில் தேசவிடுதலைப் போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன் பெண் அடிமைத்தனம், பெண் சமத்துவம் இன்மை, சீதனக்கொடுமை, சாதியப் பாகுபாடு. பாலியல் தொல்லைகள் போன்ற சமூகக்களைகள் ஈழத்துபெண்களை கட்டிப் போட்டிருந்தது. ஈழவிடுதலைப் போராட்டம் கொழுந்துவிட்டெரியத் தொடங்கியதும். அந்த நெருப்பில் மெல்ல மெல்ல சமூகத் களைகளும் எரியத் தொடங்கின.

ஈழவிடுதலைப் போரில் பெண்கள் தம்மை தாமே இணைந்துக்கொண்டனர். 1985 ஆவணி 18 இல் பெண்புலிகளின் முதலாவது பயிற்சிமுகாம் ஆரம்பமானது . மன்னார் அடம்பனில் சிங்கள இராணுவத்தின் மீதான தாக்குதலோடு பெண்புலிகளின் தாக்குதல் வரலாறும் ஆரம்பமாகியது.

இந்திய இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் மோதல் ஏற்பட்டபோது பெண்புலிகளின் முதலாவது வீரச்சாவு நிகழ்ந்தது. கோப்பாய்க்கும் நாவற்குழிக்குமிடையில் நடந்த சண்டையில் 10.10.1987 ஆண்டு 2ஆம் லெப்..மாலதி வீரச்சாவடைந்தார்.

2ஆம் லெப்.மாலதி வீரச்சாவடைந்த நாளே தமிழீழ பெண்கள் எழுச்சி நாளாக பிரகடனப்படுத்தப்பட்டது. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சகல கட்டமைப்புகளிலும் பெண் புலிகள் தமது ஆளுமையை வெளிப்டுத்தியதுடன் வெல்லவும் செய்தனர்.

“நாம் தமிழீழப் பெண் சமூகம் மத்தியில் ஒரு பெரிய புரட்சியை நிகழ்த்தியிருக்கின்றோம். தமிழர் வரலாற்றிலேயே நடைபெறாத புரட்சி ஒன்று தமிழீழத்தில் நடைபெற்றிருக்கின்றது”. என தமிழீத்தேசியதலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் கூறியிருந்தார்.

விடுதலைப் போராட்டம் சர்வதேச வலைப்பின்னலால் சிதிலமடைந்து போனபின்பு போரில் அதிகம் பாதிக்கப்பட்து பெண்ககளே.

பெண்கள் பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். இறுதி யுத்ததில் பெண்கள் எவ்வாறு பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள் எனபதனை லண்டனை தளமாக இயங்கும் செய்தி தொலைக்காட்சி ”சனல் 04” (channel 04) என்ற சர்வதேச ஊடகம் உலகிற்கு வெளிக்காட்டியது. இதை பார்த்த ஐ. நா. மன்ற ம் கூட மௌனமாக இருப்பதுதான் ஏனோ?

இவ் வருடம் (2019) சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் மாச் 03 ஆம் திகதி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சர்வதேச மகளிர் தின ” பெண்கள் எழுச்சி மாநாடு ” ஒன்றை நடாத்தியது, அதில் பெருமளவான பெண்கள் கலந்துகொண்டார்கள்.. அங்கு பெண்கள் எழுச்சிநாள் பிரகடனம் ஒன்றையும் வெளியிட்டனர்.

அண்ணன் வளர்த்த பெண்கள் மீண்டும் துளிர்விடுவார்கள்!