தேர்தலுக்காக மஹிந்தவுடன் பேசவில்லை- ஜே.வி.பி.

306 0

தேர்தல் நெருங்குவதனால் கூட்டணி அமைக்கும் நோக்கில் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடாத்தவில்லையென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணி நேற்று எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நடாத்திய விசேட பேச்சுவார்த்தை குறித்து கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறினார்.

நாம் நாட்டின் நன்மைக்காக எந்தவொரு கட்சியுடனும் இணைந்து குறுகிய காலத்துக்கு செயற்பட தயாராகவுள்ளோம். தேவை நிறைவேறியவுடன் நாம் எமது தனித்துவமான செயற்பாட்டை முன்னெடுப்போம். இவ்வாறு நாம் ஏற்கனவே பல கட்சிகளுடன் செயற்பட்டுள்ளோம்.

20 ஆவது திருத்தச் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை செய்யுமாறு எதிர்க் கட்சித் தலைவர் கூறினார். அவை இலகுவாக செய்ய முடியுமான ஒன்றல்ல. இருப்பினும், பேச்சுவார்த்தையில் ஓரளவு இணக்கப்பாடு இல்லாமல் இல்லையெனவும் அனுர குமார திஸாநாயக்க எம்.பி. மேலும் தெரிவித்தார்.