சட்டவிரோதமாக மரப்பலகைகளை ஏற்றிய நபர் கைது

300 0

அனுமதிப் பத்திரமில்லாது மரப்பலகைகளை ஏற்றிச் சென்ற நபர், யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹன்ரர் வாகனத்தில் அனுமதியில்லாமல் மரப்பலகைகளை கொண்டு சென்ற குற்றச்சாட்டில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவைச் சேர்ந்த 27 வயதுடைய நபர் காங்கேசந்துறை விசேட குற்றத் தடுப்புபிரிவினரால் கைது செய்யப்பட்டு, இளவாலை பொலிஸாரிடம் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.