2.10.2016 ஞாயிற்றுக்கிழமை யேர்மனி நொய்ஸ் நகரத்தில் லெப் .கேணல் திலீபன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் அநத நகரத்தில் உள்ள மக்கள் கலந்துகொண்டு ஈகைச்சுடர் லெப். கேணல் திலீபன் அவர்களுக்கு தீபம் ஏற்றி மலர்தூவி தமது வீர வணக்கத்தைச் செலுத்தினர்.
தமிழீழழத் தேசியக் கொடி ஏற்றிவைக்கப்பட்டு ஆரம்பமான இந் நிகழ்வில் சிறியவர்கள் பெரியவர்கள் என்று பலரும் தீலீபனின் ஈகத்தைப்பற்றி கவிவடித்து சிறப்புப் பேச்சுக்களும் செய்தனர். பின் உறுதிமொழி எடுக்கப்பட்டு தேசியக் கொடி இறக்கிவைக்கப்பட்டு நிகழ்வு நிறைவடைந்தது.






































