சித்திரவதையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் தினத்திதைன முன்னிட்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் “சித்திரவதைக்கு முற்றுப்புள்ளி” என்னும் தொணிப் பொருளிலான மாபெரும் பேரணி ஒன்றினை யாழில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் 30 ஆம் திகதி நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப் பேரணியுடன் கூடிய நிகழ்வில் கலந்து கொண்டு சித்திரவதையற்ற சமூகம் ஒன்றை கட்டியெழுப்புவதற்கு அனைவரும ஒன்றிணையுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் அனுப்பிவைத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
சர்வதேச ரீதியாக நினைவுகூறப்படும் சித்திரவதையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் தினம் ஒவ்வொரு வருடமும் ஜீன் மாதம் 26 ஆம் திகதி அனுஸ்ரிக்ககப்படுகின்றது.
இத்தினத்தினை நினைவுகூறும் முகமாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நாடாளவிய ரீதியில் பல நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது.
அந்த வகையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய காரியாலயம் எதிர்வரும் 30.06.2016 அன்று முற்பகல் 9 மணியிலிருந்து பிற்பகல் 12 மணிவரைக்கும் நிகழ்வுகளை நடாத்த ஏற்பாடு செய்துள்ளது.
இவற்றில் ஒன்றாக யாழ்.பிராந்திய காரியாலையத்தினால் இருந்து “சித்திரவதைக்கு முற்றுப் புள்ளி” என்னும் கருப்பொருளை கொண்ட பேரணி ஒன்று நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இப் பேரணியானது அன்று காலை 8.45 மணிக்கு 3 ஆம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்தயி காரியாலையத்திற்கு முன்பாக ஆரம்பித்து பொலிஸ் நிலைய வீதியூடாக சென்று யாழ்.போதனா வைத்திய சாலையினை அடைந்து அங்கிருந்து காங்கேசன்துறை வீதியூடாக யாழ்.பொது நூலகத்தின் முன்றலில் நிறைவு செய்யப்படவுள்ளது.
பேரணி நிறைவு செய்யப்படும் இடத்தில் சில நிகழ்வுகளும் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே சித்திரவதையற்ற சமூகம் ஒன்றை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

