அபிநந்தனோடு வந்த அந்த பெண்மணி யார்?

334 0

சிறைபிடிக்கப்பட்ட சென்னையை சேர்ந்த விமானி அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைக்கும்போது உடன் வந்த பெண்மணி பற்றிய விவரம் தெரியவந்து இருக்கிறது. 

புலவாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து பதற்றம் தொற்றிக்கொண்டிருந்தது.

அபிநந்தனோடு ஒரு பெண்மணி உடன் வந்தார். நடுத்தர வயது கொண்ட அவர், சிவப்பு நிற சுடிதார் அணிந்து இருந்தார். சிரித்த முகத்துடன் பார்ப்பதற்கு இந்திய பெண்மணி போல் காட்சி அளித்தார்.

அபிநந்தனை ஆவலோடு நோக்கிய அனைத்து விழிகளும் அந்த பெண்மணி மீதும் மொய்க்கத் தவறவில்லை.

அந்த பெண் அபிநந்தனின் உறவுப்பெண்ணா? அல்லது அதிகாரியா? அப்படி என்றால் அவர் இந்திய அதிகாரியா? அல்லது பாகிஸ்தான் அதிகாரியா? என்று பார்ப்பவர்கள் மனதில் ஒரு பட்டிமன்றமே நடக்கத்தொடங்கியது.

தற்போது அந்த பெண் யார்? என்பதற்கு விடை கிடைத்து விட்டது. அவரது பெயர் டாக்டர் பரிகா புக்தி, பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவு துறையில் இந்திய விவகாரங்களை கவனித்து வரும் இயக்குனராக இருக்கிறார்.

பாகிஸ்தான் நாட்டில் உள்ள பலுசிஸ்தான் என்ற பகுதியைச் சேர்ந்தவர். டாக்டருக்கு (எம்.பி.பி.எஸ்) படித்து இருப்பதுடன் “எப்.எஸ்.பி.” என்ற பட்டமும் பெற்றவர்.

“எப்.எஸ்.பி.” என்பது நமது நாட்டில் உள்ள “ஐ.எப்.எஸ்.”க்கு (இந்தியன் பாரின் சர்வீஸ்) இணையானது.

திறமையானவர் பரிகா புக்தி, மிகவும் புத்திசாலி. சிறந்த பேச்சாற்றலும், ராஜ தந்திரமும் மிக்கவர். சிக்கலான இந்திய-பாகிஸ்தான் விவகாரங்களை, சாதுரியமாக கையாண்டு வருவதாக அவரை பாகிஸ்தான் அதிகாரிகள் புகழ்கிறார்கள்.

இந்திய உளவாளியாக குற்றம் சாட்டப்பட்டு பாகிஸ்தான் பிடியில் இருந்து வரும், குல்பூஷன் ஜாதவ் விவகாரத்தையும் பரிகா புக்திதான் கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.