மதுபான போத்தல்களுடன் நபர் ஒருவர் கைது

248 0

ஹட்டன் – கினிகத்தேன பகுதியில் அனுமதிபத்திரம் இன்றி மோட்டார் வாகனத்தில் மதுபான போத்தல்களை கொண்டு சென்ற சந்தேக நபரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். 

குறித்த சந்தேகநபரிடமிருந்து சுமார் 24 உள்நாட்டு மது போத்தல்கள் உட்பட மோட்டார் வாகனத்தையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

குறித்த சந்தேகநபர் ஹட்டன் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார். 

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.